தமிழ்நாடு எலக்ட்ரோபதி மெடிக்கல் கான்பெடரேசன்
பதிவு எண் : 34/2021
நோக்கங்கள்:
1. இந்த சங்கம் தமிழ்நாடு அளவில் எலக்ட்ரோபதி மருத்துவ முறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2.
இந்த சங்கம் N.E.H.M of INDIAவின் கீழ் பதிவு பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து
அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் முழுமையான
தேவைகளுக்காக போராடும்.
3.
எலக்ட்ரோபதி மருத்துவ
முறையின் வளர்ச்சிக்காக புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதுடன், ஆராய்ச்சி ஆய்வகங்களை
நிறுவுவதற்கும் இந்த சங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும்.
4. இந்த சங்கம் அனைத்து எலக்ட்ரோபதி மருத்துவர்களுக்கும்
பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் எலக்ட்ரோபதி மருத்துவம்
தொடர்பான நூல்கள், குறுந்தகடுகள், மென்பொருள்கள், செயலிகள், மருத்துவ இதழ்கள் போன்றவைகளை
வெளியிடும்.
5. இந்த சங்கம் அனைத்து எலக்ட்ரோபதி மருத்துவமனைகள், பிற அமைப்புகள் மற்றும் எலக்ட்ரோபதி மருந்து உற்பத்தியாளர்களின்
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக முறையான ஆலோசனைகளை வழங்கும்.
6. இந்த சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்கள், சிறந்த எலக்ட்ரோபதி மருத்துவமனைகள், சிறந்த
எலக்ட்ரோபதி கல்வியாளர்கள்
மற்றும் புகழ்பெற்ற எலக்ட்ரோபதி மருத்துவ நிறுவனங்களை அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக பொருத்தமான
விருதுகளை வழங்கி கௌரவிக்கும்.
7. இந்த சங்கம் எலக்ட்ரோபதி சிஸ்டம் ஆஃப் மெடிசின்
மேம்பாட்டிற்காக இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், மாநில அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள்,
கண்காட்சிகளை நடத்தும்.
8. இந்த சங்கம் அரசு மற்றும் நீதிமன்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, முறையாக பயிற்சிபெற்று,
N.E.H.M பதிவு பெற்ற எலக்ட்ரோபதி மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு உறுதுணையாக
நிற்கும்.
9. இந்த சங்கம் அரசு மற்றும் நீதிமன்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக நடைபெற்று வரும்
N.E.H.M எலக்ட்ரோபதி மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
10. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவக்கல்வி முறையில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு வழிமுறையையும் ஏற்கெனவே பயிலும் மாணவர்களின் குறையை நிவர்த்தி
செய்யும்.
11. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவமுறையில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்
12. இந்த சங்கம் எலக்ட்ரோபதி இலவச மருத்துவப் பயிற்சி மையங்கள் தொடங்கி சேவை செய்யும்.
13. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவம் தொடர்பான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும்.
14. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவத்தில், சட்டத்திற்கு உட்பட்டு மருந்துகள் தயாரிக்கவோ
அல்லது விநியோகிக்கவோ அல்லது ஏற்கெனவே அனுமதி பெற்றிருக்கும் நிறுவனங்களிடமிருந்து
மருந்துகள் பெற்றுத்தரவோ வழிவகை செய்யும்.
15. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவ மூலிகைத் தோட்டங்கள், பண்ணைகள் அமைக்க வழிவகை செய்யும்.
16. இந்த சங்கம் சங்க உறுப்பினர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும்.
17. இந்த சங்கம் எலக்ட்ரோபதி மருத்துவத்தை
இந்தியாவில் அங்கீகரிக்க ஏற்கனவே பங்கேற்றுக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு N.E.H.M of INDIAவின் கீழ் உறுதுணையாக நிற்கும்.
18. இந்த சங்கம் தமிழ்நாட்டில் N.E.H.M of INDIAவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட
எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களை ஒழுங்குபடுத்த வழிவகை செய்யும்.
No comments:
Post a Comment